செய்திகள் :

திருமணமான புதிதில் தம்பதியரைப் பிரித்து வைக்காதீர்கள்...! | காமத்துக்கு மரியாதை - 224

post image

செக்ஸ் தொடர்பாகவும் குழந்தை பிறப்பு தொடர்பாகவும் எத்தனையெத்தனை மூட நம்பிக்கைகள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம். அதை விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

''ரகுவுக்கும் ராஜேஸ்வரிக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அன்று முதலிரவு. இரவு 10 மணிக்குள் முதலிரவு அறைக்குள் சென்றுவிட வேண்டும் என, அவர்கள் வீட்டைச் சேர்ந்த பாட்டி ஒருவர் வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி திட்டமிட்டும், ரிசப்ஷனை முடித்துக்கொண்டு 10 மணிக்குள் வீட்டுக்கு வர முடியவில்லை. ஹோட்டல் அறையிலேயே முதலிரவு அரேன்ஜ் செய்துகொள்ளலாம் என்று மணமக்களின் பெற்றோர் எடுத்துச்சொல்லியும், வீட்டுக்கு மூத்தவரான பாட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. விளைவு முதலிரவையே தள்ளி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, மறுபடியும் நாள், நேரம் எல்லாம் பார்த்து 15 நாள் கழித்து முதலிரவுக்கான தேதியைக் குறித்திருக்கிறார்கள். சில வாரம் கழித்து, தம்பதியர் சேரக்கூடாத மாதம் என மறுபடியும் ஒரு மாதம் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

புதுமணத் தம்பதி | Newlywed (சித்திரிப்புப் படம்)

தம்பதிகள் சேர்ந்திருந்த நாள்களிலும், 'கல்யாணமானா இந்தக் கோயிலுக்கு வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன். அங்க நாளைக்குப் போகணும். அதனால, இன்னிக்கு நைட் எதுவும் கூடாது. மீறி சேர்ந்தீங்கன்னா, குடும்பத்துக்கு ஆகாது'ன்னு சில நாள்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். திருமணமாகி கிட்டத்தட்ட 2 மாதம் கழித்துதான் ரகு, ராஜி தம்பதி வீட்டுப் பெரியவர்களின் குறுக்கீடு இல்லாமல் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், உண்மையானப் பிரச்னையே அதன்பிறகுதான் ஆரம்பித்திருக்கிறது.

ரகுவுக்கு நைட் ஷிஃப்ட் வேலைக்கு மாற்றலாகி விட, உறவுகொள்ளும் நாள்கள் குறைய ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்த மாதங்கள் ராஜேஸ்வரிக்கு பீரியட்ஸ் ஆகும்போதெல்லாம் வீட்டுப்பெரியவர்கள் 'இந்த மாதமும் விலக்காயிட்டியா' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியே 6 மாதம் போக, 'எங்க வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் கல்யாணமான ஒண்ணு ரெண்டு மாசத்துலேயே உண்டாகிட்டாங்க' என்று பெருமைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் மீது காட்ட முடியாத கோபத்தை ராஜேஸ்வரி தன் கணவன் மீது காட்ட, சண்டையாகி விட்டது. ரகுவுக்கு சப்போர்ட்டாக அவருடைய குடும்பத்தினர் வர, கோவித்துக்கொண்டு ராஜேஸ்வரி அவருடைய பிறந்த வீட்டுக்குப் போக, 'ரகு ஆண்மையில்லாதவர்' என்கிற அளவுக்கு பிரச்னை பெரிதாகி விட்டது.

காதல் டிப்ஸ்

'எங்க குடும்பத்துல எல்லாருக்கும் குழந்தையிருக்கு. அதெப்படி எங்க வீட்டுப்பையனை ஆண்மையில்லாதவன்னு சொல்வீங்க'ன்னு ரகு வீட்டாரும், 'யார் சொன்னாலும் தலையாட்டுற இவனெல்லாம் ஆம்பளையா'ன்னு ராஜேஸ்வரி வீட்டாரும் அடித்துக்கொள்ளாத குறையாக சண்டை போட, ரகு, ராஜேஸ்வரி தம்பதியை மட்டும் அழைத்துப் பேசினேன்.

'திருமணமான புதுசுல தங்களோட செக்ஸ் வாழ்க்கையை வீட்டுப் பெரியவங்க தள்ளிப்போட்டது தனக்கும் வருத்தம்தான். அவங்களை மீறி நடந்திருந்தா 'பொண்டாட்டி தாசன்'னு கிண்டல் செஞ்சிருப்பாங்க. ராஜி மனசுக்கஷ்டப்படுற மாதிரி ஏதாவது பேசியிருப்பாங்க. அப்படி நடக்கக்கூடாதுன்னுதான் அவங்க சொன்னதையெல்லாம் கேட்டேன் என்றார். இதைக்கேட்டவுடன் ராஜேஸ்வரி நெகிழ்ந்துபோய் அழ ஆரம்பிக்க, ரகு தன் மனைவிக்கு சமாதானம் சொல்ல ஆரம்பித்தார். ஸோ, தம்பதியரின் பிரச்னை சரியாகி விட்டது.

காமராஜ்

அதன்பிறகு, வாரத்துக்கு 4 நாள் செக்ஸ் வைத்துக்கொண்டால் கருத்தரிக்க 83 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. இதுவே ஒரு நாள் மட்டும் செக்ஸ் வைத்துக்கொண்டால் 17 சதவிகிதம் மட்டுமே கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய உறவின் நாள்களை அதிகரியுங்கள். நைட் ஷிஃப்ட் சென்றாலும், பகலிலோ, சாயங்கால நேரங்களிலோ தினமும் உறவுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். விந்தணுக்களுக்கும் கருமுட்டைக்கும் நேரம், காலம் கிடையாது. நீங்கள் எப்போது செக்ஸ் செய்தாலும் அவை ஒன்று சேரும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Divorce: `விவாகரத்துக்கு முக்கியமான 6 காரணங்கள்!' - விளக்கும் நிபுணர்! | காமத்துக்கு மரியாதை - 222

நம் நாட்டிலும் விவாகரத்து நார்மலைஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணம் என்றால், விவாகரத்தும் சரிதான். ஆனால், சின்னச்சின்ன காரணங்களுக்கெல்லாம் விவாகரத்து வரை செல்வது வேண்டாமே என்கிற டாக்டர் ... மேலும் பார்க்க

சிறுநீரும் வாயுவும் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறுகிறதா? | காமத்துக்கு மரியாதை - 221

சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவரும். அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும். குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் மெ... மேலும் பார்க்க

Relationship: தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்!

Relationship'இட்இஸ்மை பர்சனல்' என்றுசொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையேவிரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது.சமூக ஊடகங்கள்இணையிடம் தோன்... மேலும் பார்க்க

மனைவிக்கு உங்களைப் பிடிக்கணுமா? இந்த 10 பாயிண்ட்ஸை ஃபாலோ பண்ணுங்க... | காமத்துக்கு மரியாதை - 220

காமத்துக்கு மரியாதை 1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.காமத்துக்கு மரி... மேலும் பார்க்க

50 வயதுக்கு மேல அதிகரிக்கும் டைவர்ஸ்; இன்டர்நேஷனல் ரிசர்ச் சொல்வதென்ன? | காமத்துக்கு மரியாதை - 219

க்ரே டைவர்ஸ் (Grey Divorce) தெரியுமா உங்களுக்கு..? ஐம்பது வயசுக்கு மேல, அதாவது தலையில க்ரே ஹேர் வந்ததுக்கு அப்புறம் செய்யப்படுற விவாகரத்துக்குத்தான் க்ரே டைவர்ஸுனு பேர். இதுதொடர்பா உலகளவுல நடந்த ஆராய்... மேலும் பார்க்க