செய்திகள் :

சிறுநீரும் வாயுவும் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறுகிறதா? | காமத்துக்கு மரியாதை - 221

post image

சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவரும். அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும். குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும், சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யும். விளைவு இருமும்போது, தும்மும்போது, சிரிக்கும்போது, கனமானப் பொருளைத் தூக்கும்போது சிறுநீர்க் கசியும். இந்தப் பிரச்னை மெனோபாஸ் காலக்கட்டத்தில்கூட சில பெண்களுக்கு வரும். பிரசவம் காரணமாக, பெண்ணுறுப்பு மற்றும் ஆசனவாயைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வதால், சிறுநீர்க் கசிவது மட்டுமல்லாமல், வாயு வெளியேறுவது, அரிதாக மலம் வெளியேறுவதுகூட சிலருக்கு நிகழும். இதே பிரச்னைகள், நீரிழிவு, உடல் பருமன், நரம்பு பிரச்னைகள் காரணமாக ஆண்களுக்கும் வரும். கணவன் - மனைவிக்கு இடையே மிகுந்த சங்கடத்தைத் தருகிற இந்தப் பிரச்னைகளை சரி செய்யும் கெகல் உடற்பயிற்சிப் பற்றி சொல்கிறார், பாலியல் மருத்துவர் காமராஜ்.

Kegel Exercise

’’இந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கு முன்னால், கட்டாயம் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட வேண்டும். பயிற்சியை உட்கார்ந்தும் செய்யலாம் அல்லது படுத்தவண்ணமும் செய்யலாம். சாப்பிடுவதற்கு முன்னால்தான் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் பெண்ணுறுப்பின் தசையையும், ஆசனவாய் தசையையும் இறுக்கமாக்க வேண்டும். 1 முதல் 10 வரை மனதுக்குள் எண்ணிவிட்டு, இரண்டு தசைகளையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை 10 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்துவந்தால், சுகப்பிரசவத்தால் விரிவடைந்த பெண்ணுறுப்பும், தளர்வடைந்த ஆசனவாய்த் தசைகளும் படிப்படிப்படியாக தன் இயல்புநிலைக்குத் திரும்பி விடும்.

பிரசவத்துக்குப் பிறகு, 'அடிவயிறு தொய்ந்து போயிடுச்சு' என்று ஃபீல் செய்யாத பெண்களே கிடையாது எனலாம். அப்படித் தளராமல் இருப்பதற்கு வீட்டின் மூத்த பெண்மணிகள், சுகப்பிரசவமான பெண்ணின் வயிற்றில் துணியை இறுக்கமாகக் கட்டி விடுவார்கள். இதனால், அடிவயிற்றுத் தசைகள் இறுக்கமாகாது என்பதே உண்மை. இவர்கள், அடிவயிற்றுத் தசையை இறுக்கிப் பிடிப்பதுபோல பயிற்சியைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வர, அடிவயிற்றுத் தசைகள் மீண்டும் இறுக்கமாகி, உறுதி பெறும். இந்த உடற்பயிற்சியைச் செய்யும்போது, கூடுதல் பலனாக, தளர்ந்த பெண்ணுறுப்பிலும் இறுக்கம் வர ஆரம்பிக்கும்.

காமராஜ்

இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன். அது சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, குழந்தைப் பிறந்த பிறகு கருப்பைக்குள் காற்று போய் விடும். அதனால்தான், குழந்தைப் பிறந்தப் பெண்கள் சிலருக்கு வயிறு பெரிதாகவே இருக்கிறது. அப்படி கருப்பைக்குள் சென்ற காற்றுதான் அடிக்கடி வாயுவாக வெளியேறுகிறது என்றும் சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் உண்மை கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு தேவைக்கும் அதிகமாக சாப்பிடும்போது, அது கொழுப்பாக வயிற்றுப்பகுதியில் சேர்ந்து விடுகிறது. ஆசவவாய்த் தசைகள் பலவீனமாக இருப்பதால், குடல் பகுதியில் உருவாகிற காற்றானது அடிக்கடி வெளியேறுகிறது.

பெண்ணுறுப்புத் தளர்வும், அடிவயிற்றுத் தளர்வும் அதிகமாக இருக்கிறதென்றால், பிசியோதெரபிஸ்ட் உதவியையும் நாடலாம். பிரச்னைகளை வெளியே சொல்ல தயக்கப்பட்டுக்கொண்டே இருந்தால், தளர்ந்த பெண்ணுறுப்பும் சரியாகாது; அடிவயிறு இறங்கி தொந்தியும் வரும். கூடவே, சிறுநீர்க் கசிவு, மலக்கசிவு, வாயு வெளியேற்றம் என சங்கடங்களும் வரிசைக்கட்டும். பிரசவத்துக்குப் பிறகு உங்கள் உடலையும், ஆரோக்கியத்தையும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Relationship: தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்!

Relationship'இட்இஸ்மை பர்சனல்' என்றுசொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையேவிரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது.சமூக ஊடகங்கள்இணையிடம் தோன்... மேலும் பார்க்க

மனைவிக்கு உங்களைப் பிடிக்கணுமா? இந்த 10 பாயிண்ட்ஸை ஃபாலோ பண்ணுங்க... | காமத்துக்கு மரியாதை - 220

காமத்துக்கு மரியாதை 1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.காமத்துக்கு மரி... மேலும் பார்க்க

50 வயதுக்கு மேல அதிகரிக்கும் டைவர்ஸ்; இன்டர்நேஷனல் ரிசர்ச் சொல்வதென்ன? | காமத்துக்கு மரியாதை - 219

க்ரே டைவர்ஸ் (Grey Divorce) தெரியுமா உங்களுக்கு..? ஐம்பது வயசுக்கு மேல, அதாவது தலையில க்ரே ஹேர் வந்ததுக்கு அப்புறம் செய்யப்படுற விவாகரத்துக்குத்தான் க்ரே டைவர்ஸுனு பேர். இதுதொடர்பா உலகளவுல நடந்த ஆராய்... மேலும் பார்க்க

விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை

தாம்பத்யம்`விந்து முந்துதல்' பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உறவில் 2 நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். அதனால், உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால், அவர்க... மேலும் பார்க்க

முதலிரவு அப்போ பீரியட்ஸ்; உறவு வெச்சுக்கலாமா? | காமத்துக்கு மரியாதை - 217

அந்த மணமக்களுக்கு முதல் நாள் இரவு ரிசப்ஷன்; மறுநாள் காலையில் திருமணம். திருமணம் நிச்சயம் நடந்ததோ இரண்டு மாதங்களுக்கு முன்னால். நிச்சயமான நாளிலிருந்தே எக்கச்சக்க லவ் டயலாக்களுடன் திருமண நாளை எதிர்பார்த... மேலும் பார்க்க

முதலிரவு ஃபீல் குட் ஆக இருக்க 7 பாயின்ட் ! | காமத்துக்கு மரியாதை - 216

இந்த டென்ஷன் வேண்டாம்செக்ஸ் வாழ்க்கைஅது பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் என்றாலும் சரி, காதல் திருமணம் என்றாலும் சரி, அல்லது பெற்றோர் நிச்சயித்து அதன் பிறகு காதல் வந்து நடைபெற்ற திருமணம் என்றால... மேலும் பார்க்க