செய்திகள் :

Murmu: சட்டென மாறிய வானிலை; சாலை மார்க்கமாக வந்த வான்படை; பாதுகாப்பாக ஊட்டி சென்ற குடியரசுத் தலைவர்!

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசு முறை பயணமாகத் தமிழ்நாட்டிற்கு இன்று (நவம்பர் 27) காலை வருகை தந்திருக்கிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் பகுதியிலுள்ள முப்படை அதிகாரிகளுக்கான ராணுவப் பயிற்சி கல்லூரியில் நாளை (நவம்பர் 28) நடைபெற இருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். நாளை மறுநாள் (நவம்பர் 29) ஊட்டியில் பழங்குடி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட இருக்கிறார்.

குடியரசு தலைவர் ஊட்டி வருகை

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 30ஆம் தேதி நடைபெறவுள்ள 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவரின் வருகைக்காக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஹெலிகாப்டர் இறங்குத் தளங்கள் முதல் நிகழ்ச்சி அரங்குகள் வரை ராணுவ அதிகாரிகள், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் ஒத்திகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வந்தனர்.

குடியரசுத் தலைவரை வரவேற்க நேற்றிரவே ஊட்டி ராஜ்பவன் வந்தடைந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திட்டமிட்ட படி இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

குடியரசு தலைவர் ஊட்டி வருகை

சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க உச்சபட்ச பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவனைச் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர். ஆளுநர், முதல்வர், ஆட்சியர் வரை அரசுத்துறை சார்பில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரிகள், "கடந்த ஒரு வாரமாகக் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. சமவெளிப் பகுதிகளிலிருந்து மலையை நோக்கி ஹெலிகாப்டரை இயக்குவதிலும், ஊட்டியில் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கை அறிகுறிகள் கிடைக்கப்பெற்றது.

குடியரசு தலைவர் ஊட்டி வருகை

வான்படை அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்றி ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.‌ கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டி ராஜ்பவனை வந்தடைந்தார். சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

பூந்தமல்லி சாலையில் பாரம் தாங்காமல் சாய்ந்த மெட்ரோ தூண் கம்பிகள்... வாகன ஓட்டிகள் அச்சம்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்திருக்கிறது. ... மேலும் பார்க்க

`புத்தகத்தில் மாணவனின் சாதிப் பெயர்' - அரசுப்பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை வழக்கு

திருப்பத்தூர் அடுத்துள்ள கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் விஜயகுமார் என்பவர் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ம்... மேலும் பார்க்க

``புகார் மனுக்கு ரசீது கொடுக்கவில்லை'' - கொட்டும் மழையில் சாலை மறியல்... விருதுநகரில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புகார் மனுவுக்கான ரசீதுகேட்டு கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட... மேலும் பார்க்க

PAN 2.0: 'கட்டணம் இல்லை' - QR கோடுடன் அப்டேட் செய்யப்படவிருக்கும் பான் அட்டைகள்!

பான், டான் எண்ணை ஒன்றிணைத்து, இனி பான் எண்ணை மட்டும் டிஜிட்டல் சேவைகளுக்கு பயன்படுத்தும்படியான பான் 2.0 திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பான் 2.0 ... மேலும் பார்க்க

`லிஃப்ட்டையே காணோம்; ரூ.27 லட்சம் எங்கே?' - ஒப்பந்ததாரருடன் சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் ஆய்வகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ், லிஃப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம்... மேலும் பார்க்க

Murmu: பழங்குடிகள் சந்திப்பு டு பட்டமளிப்பு விழா - 4 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர்

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையத்தை வந்தடைய இருக்கிறார். ... மேலும் பார்க்க