செய்திகள் :

பேராசை பிடித்தவர்கள் இந்திய ரசிகர்கள்..! கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கருத்து!

post image

இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 500 நாள்களாக சதமடிக்காமல் இருந்து, ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இதன் மூலம் விராட் கோலி 81ஆவது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட்டில் மட்டும் இது 30ஆவது சதமாகும். மொத்தமாக டெஸ்ட்டில் 119 போட்டிகளில் 9,145 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 48.13ஆக இருக்கிறது.

26 பிஜிடி தொடரில் 2,147 ரன்கள் எடுத்துள்ளதும் 2020க்குப் பிறகு விராட் கோலியின் சராசரி 32.93ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி டிச.6இல் தொடங்குகிறது.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

நான் வர்ணனையில் சொன்னதுபோல ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி நாயகர்கள். அவர்கள் அரையிறுதியில் தோற்றால் மக்கள் ‘ஃபார்மில் இல்லை’ என்றும் வென்றால் ‘அருமையான செயல்பாடு’ என்பார்கள்.

அதேபோலதான் விராட் கோலியும். தொடச்சியாக சதம் அடித்து பழக்கப்பட்டவர். அவர் சதமடிக்காமல் 70-80 ரன்கள் அடித்தாலும் அது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. பலரும் விராட் கோலியை ‘பாருங்கள். சரியாக ரன்களை அடிக்கவில்லை’ எனக் கூறுவார்கள்.

இந்திய ரசிகர்கள் மிகவும் பேராசை பிடித்தவர்கள். அவர்களது ஆதர்ஷ நாயகன் 60-70 ரன்கள் அடித்தால் அவர்களுக்கு போதாது. சதமடிக்க வேண்டுமென நினைப்பார்கள். 2023 ஜூலையில் கடைசியாக சதம் அடித்தார். ஆனால், ஜூலை தற்போதுதான் ஒரு வருடம் முன்பு சென்றது என்பதை மறந்துவிடுவார்கள்.

முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் ஆகியதால் விராட் அழுத்தத்தில் இருந்தார். 2ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி தனது ஸ்டான்ஸை மாற்றியிருப்பார். சிறிதுதான் மாற்றியிருப்பார். ஆனால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பலனை தந்துள்ளது என்றார்.

ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கன் வீரர்கள்..! ரஷித் கான் நெகிழ்ச்சி!

ஆப்கன் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியெனக் கூறியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2017இல் முதன்முதலாக ஐபிஎல் போட்டிக்க... மேலும் பார்க்க

கேகேஆர் அணியில் விளையாடியது குறித்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் பேட்டி!

பாபா இந்திரஜித் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். முதல்தர கிரிக்கெட்டில் 81 போட்டிகளில் 5,545 ரன்கள் குவித்துள்ளார். அதில் 16 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும். சராசரி 52.31 என்பது குறிப்பிடத்தக்க... மேலும் பார்க்க

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததன் காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார். 32 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் கடைசியாக சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். காயம் காரணமாக பந... மேலும் பார்க்க

டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற... மேலும் பார்க்க

28 பந்துகளில் அதிரடி சதம்! ரிஷப் பந்த் சாதனையை அடித்து நொறுக்கிய குஜராத் வீரர்!

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் அதிரடியாக சதமடித்து குஜராத் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.சையத் முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரரான உர்வில் பட்ட... மேலும் பார்க்க

பாக். வன்முறை: பாதியில் நாடு திரும்பிய இலங்கை ஏ அணி!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்க... மேலும் பார்க்க