டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனாலும், இந்தப் போட்டியைத் தலைமை தாங்கிய பொறுப்பு கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.
28 பந்துகளில் அதிரடி சதம்! ரிஷப் பந்த் சாதனையை அடித்து நொறுக்கிய குஜராத் வீரர்!
ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களில் சுருண்டது. மேலும் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
அதன்தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பும்ரா 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சரியாக சோபிக்காததால் ஹேசில்வுட், கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் சரிவைச் சந்தித்துள்ளனர்.