செய்திகள் :

இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 6 பள்ளிக் குழந்தைகள் மாயம்!

post image

இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமான 6 குழந்தைகள் தேடப்பட்டு வருகின்றனர்.

வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான வானிலை நிலவுவதால், இது இலங்கைக்கு அருகில் சென்று வியாழக்கிழமை (நவ. 28) சூறாவளி புயலாக தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரைதிவு நகர் அருகே செவ்வாய்க்கிழமை (நவ. 26) மாலையில் பள்ளிக் குழந்தைகள் 11 பேரை ஏற்றி வந்த டிராக்டரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளில் 5 பேர் மீட்கப்பட்டு விட்டனர். இருப்பினும், அவர்களுடன் சென்ற 6 குழந்தைகளும், டிராக்டர் ஓட்டுநரும், உடன்சென்ற மற்றொருவரும் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்கரை பகுதியில் சூறாவளிக் காற்று

மேலும், பதுல்லாவில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். வானிலை தொடர்பான பல்வேறு விபத்துகளில் 8 பேர் காயமடைந்ததாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதன்கிழமை (நவ. 27) நிலவரப்படி, கிட்டத்தட்ட 600 வீடுகள் சேதமடைந்ததால், 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் சில பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மே மாதத்திலிருந்து கடுமையான வானிலையால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இயற்கை சீற்ற விபத்துகளும் நிகழ்கின்றன. ஜூன் மாதத்தில் வெள்ளம், மண்சரிவு காரணமாக 16 பேர் பலியாகினர்.

இதையும் படிக்க:மாநிலங்களவையில் முதல்முறையாக இடம்பெறும் தெலுங்கு தேசம்!

லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரி... மேலும் பார்க்க

ஆஸி.: சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை மசோதா நிறைவேற்றம்!

ஆஸ்திரேலியாவில் சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமா் பரிந்துரை

லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அம... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக விசாரணை நடத்த, துணை அதிபா் சாரா டுடோ்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினா் போராட்டத்தில் வன்முறை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழ... மேலும் பார்க்க