செய்திகள் :

Maharastra: 'பிரதமரின் முடிவே இறுதி!' - முதல்வர் பதவி குறித்து ஏக்நாத் ஷிண்டே சொல்வதென்ன?

post image
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்காக, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏக்நாத் ஷிண்டே -மோடி - பட்னாவிஸ்

எங்களின் அன்புக்குரிய சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் நன்றி. சிவ சேனாவின் சாதாரண தொண்டனும் முதல்வராக வேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு. அந்த வகையில் 2.5 வருடங்கள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று தொலைபேசியில் பேசினேன்.

அப்போது, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என என்னிடம் கூறினார். அப்போது நான், இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன். பாஜக-வின் முடிவுக்கு சிவசேனா முழுமையான ஆதரவைத் தரும்" என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Maharashtra: முதல்வர் பதவி விவகாரம்: "பிரதமரின் முடிவை ஏற்பேன்" - சரணடைந்த ஷிண்டே; பாஜக திட்டமென்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றும் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே தயக்கம் காட்டி வருகிறார். தற்போது தனது நிலையில... மேலும் பார்க்க

Rain Alert: Cyclone Fengal தாக்கம் எப்படியிருக்கும்? | Modi | Rahul Gandhi | Imperfect Show

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

'கலைஞரை வாதத்தில் வென்ற உதயநிதி' - வைரமுத்து பகிர்ந்த வாழ்த்து!

திமுக இளைஞரணித் தலைவரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.கட்சித் தொண்டர்கள் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடிவரும் நிலையில், அரசியல் தலைவர்களும் அவருக்கு வா... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: `அவர் மட்டும் முதல்வரை அப்படி பேசலாமா... அது சரியா?' - எம்.பி திருச்சி சிவா கேள்வி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும... மேலும் பார்க்க

``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு

அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சிதிலடமடைந்த சிலைக்கு அடியில் பேருந்துக்காக தஞ்சமடையும் மக்கள்; ஆபத்தை உணருமா அரசு?

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டைஅடுத்தகோடியூரில்‌ அமைந்துள்ளது இந்த இடம். வாணியம்பாடி, ஆம்பூர் ,வேலூர் மற்றும் பிறஊர்களுக்குச்செல்வதற்காகப்பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தகோ... மேலும் பார்க்க