Maharashtra: முதல்வர் பதவி விவகாரம்: "பிரதமரின் முடிவை ஏற்பேன்" - சரணடைந்த ஷிண்ட...
சென்னை: சின்னத்திரை நடிகையைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியவர் கைது; பின்னணி என்ன?
சென்னை சூளைமேடு காமராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் சின்னத்திரை நடிகை ஒருவர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, "நான் சின்னத்திரையில் நடிகையாக உள்ளேன். எனக்கு சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறினார் சந்தோஷ். அதை நம்பி நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அப்போது சந்தோஷ் கேட்ட போதெல்லாம் நகை, பணத்தைக் கொடுத்தேன்.
இதுவரை சந்தோஷிக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை நான் கொடுத்துள்ளேன். அதைப் போல இரண்டு சவரன் தங்க நகைகளையும் கொடுத்திருக்கிறேன். இந்தச் சூழலில் என்னைத் திருமணம் செய்ய சந்தோஷ் காலம் கடத்தி வந்தார். அது குறித்து அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் என்னிடம் வாங்கிய நகைகள், பணத்தை சந்தோஷிடம் திரும்பக் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். எனவே என்னை ஏமாற்றிய சந்தோஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு சந்தோஷ் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து சந்தோஷிடம் விசாரணை நடந்து வருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...