செய்திகள் :

சேலம்: கணவர் மீது சந்தேகம்; 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்மலை அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு மனோரஞ்சனி, நித்திஸ்வரி என இரண்டு மகள்கள் இருந்தனர். தற்போது மாதம்மாள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால் மாதம்மாள் கோபித்துக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றார்.

பின்னர் சமாதானம் அடைந்த மாதம்மாள் குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு வந்தார். கடந்த 23-ம் தேதி வீட்டில் இருந்த மாதம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை... அவர்களை நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரவியின் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் மாதம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மிதந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததின் பேரில் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது அவர்கள் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை செய்தபோது, விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வந்த ரவி அடிக்கடி தாமதமாக வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், `வேலை முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கே சென்று விட்டு வருகிறாய்?' என கேட்டு மாதம்மாள் ரவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதல் வந்துள்ளது. தன்னிடம் கணவர் உண்மையை மறைக்கிறார் என்ற வேதனையில் அவர் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அக்கறைப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் சமாதானம் அடைந்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த மாதம்மாள், மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்து குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பெண்டிங் வழக்குகள்: சிக்கிய `பவாரியா கேங்’... 22 ஆண்டுகளை கடந்த தாளமுத்து நடராஜன் கொலை வழக்கின் நிலை

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; பேசுவதை நிறுத்திய பெண்... கொடூரமாக கொலைசெய்த இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேல... மேலும் பார்க்க

நாமக்கல்: 23 மணிநேரம் நடந்த விஜிலன்ஸ் ரெய்டு, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்து... மேலும் பார்க்க

திருடுபோன வாகனத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம்; 18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு - காவலருக்கு 3 ஆண்டு சிறை!

திருப்பூர் பி.கே.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (50). கடந்த 2006-ம் ஆண்டு பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்... மேலும் பார்க்க

9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிரசவம்; 10-ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது - தஞ்சை அதிர்ச்சி!

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயிறு சற்று வீக்கமாக இருந்துள்ளது. ஆனால் அவரது பெற்றோர் அதை முறையாக கவனிக்கவில்லை எனச் சொல... மேலும் பார்க்க

`1000-வது திருட்டுக்கு வாழ்த்துகள்!' - BSNL டெர்மினேஷன் பாக்ஸ் திருட்டு... வடிவேல் பாணியில் ஃப்ளக்ஸ்

BSNL கேபிள் கட், பாக்ஸ் திருட்டு...புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் 'ஆல்பா க்ரூப்ஸ்' என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் இணையதள கனெக்ஷனுக்காக கேபிள் பதிக்கும் கான்ட்ராக்ட்டை கமிஷன் அட... மேலும் பார்க்க