செய்திகள் :

அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்டாச்சார்யா?!

post image

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், இந்திய-அமெரிக்க மருத்துவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை, நாட்டின் தலைசிறந்த சுகாதார ஆராய்ச்சி மற்றும் நிதியளிப்பு நிறுவனமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) அடுத்த இயக்குநராக நியமித்துள்ளார்.

1968 இல் கொல்கத்தாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா , ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராகவும், தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ள டாக்டர் பட்டாச்சார்யா, ஸ்டான்ஃபோர்டின் மக்கள்தொகை, ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கான பொருளாதார மையத்தை இயக்கி வருகிறார்.

இவரின் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்துவதாக உள்ளது. மேலும் அரசாங்க திட்டங்கள், உயிரியல் மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் பங்குக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.

டாக்டர் பட்டாச்சார்யாவின் சமீபத்திய ஆராய்ச்சிகள், கோவிட்-19 தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. கோவிட்- 19 தொற்று குறித்த சிறந்த விமர்சகராக விளங்கிய இவர், கொரோனா வைரஸ் தொடர்பான பணி நிறுத்தங்களைத் திரும்பப் பெற அழைப்பு விடுத்தது போன்ற முக்கிய முடிவுகளில் பங்காற்றியவர்.

டொனால்டு ட்ரம்ப்

மருத்துவம், பொருளாதாரம், சுகாதாரக் கொள்கை, தொற்றுநோயியல், புள்ளியியல், சட்டம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் இதுவரை சுமார் 135 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அரசாங்கத் திறன் துறையை (DOGE) எலான் மாஸ்க்குடன் சேர்ந்து வழிநடத்துவார் என்று அறிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், மேலும் ஒரு அமெரிக்க இந்தியரை நாட்டின் உயர் பதவிக்கு நியமித்து இந்திய வம்சாவளியினர் பக்கம் பார்வையை திருப்பி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு

அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சிதிலடமடைந்த சிலைக்கு அடியில் பேருந்துக்காக தஞ்சமடையும் மக்கள்; ஆபத்தை உணருமா அரசு?

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டைஅடுத்தகோடியூரில்‌ அமைந்துள்ளது இந்த இடம். வாணியம்பாடி, ஆம்பூர் ,வேலூர் மற்றும் பிறஊர்களுக்குச்செல்வதற்காகப்பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தகோ... மேலும் பார்க்க

"Scotland Yard இணையானது நமது தமிழக காவல்துறை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3359 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.அதில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்... மேலும் பார்க்க

அதிமுக கள ஆய்வுக் கூட்டமா, அடிதடிக் களமா? - தொடரும் மோதலும் பின்னணியும்

கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அணிகளின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 10 பேர் கொண்ட ' ... மேலும் பார்க்க