செய்திகள் :

"Scotland Yard இணையானது நமது தமிழக காவல்துறை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

post image
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3359 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

அதில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார் . “இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். 165 ஆண்டுகள் பழைமையும் பெருமையும் மிக்கது தமிழ்நாடு காவல்துறை. காவலர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. காவலர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது. உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.

மு.க. ஸ்டாலின்

காவல்துறையை மேம்படுத்த முதல்முறையாக காவல் ஆணையம் அமைத்தது திமுக அரசு. கடந்த 3 ஆண்டுகளில் காவலர்கள் முதல் டி.எஸ்.பி. வரை 17,000 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது நம் தமிழக காவல்துறை. சைபர் குற்றங்கள், போதைப்பொருள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தான் நமக்கு சவாலாக உள்ளன.

குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே நமது இலக்கு. காவல்துறை என்பது மக்களிடம் நெருக்கமாக பழகக்கூடிய துறை. உங்கள் மீது பயம் இருக்கக்கூடாது. மரியாதைதான் இருக்கவேண்டும். சட்டம்தான் முக்கியம். பொதுமக்களை கனிவாக அணுகவேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பது சாதனை அல்ல.

மு.க. ஸ்டாலின்

குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே காவல்துறையினரின் சாதனை. புதிதாக பெறுப்பேற்று காக்கிச் சட்டை போடும் நீங்கள் அதற்கான உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். காவலர் என்ற மிடுக்கு ஓய்வுபெறும்வரை உங்களிடம் இருக்கவேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

அதிமுக கள ஆய்வுக் கூட்டமா, அடிதடிக் களமா? - தொடரும் மோதலும் பின்னணியும்

கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அணிகளின் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 10 பேர் கொண்ட ' ... மேலும் பார்க்க

BJP: "தை மாதத்தில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர்" - சொல்கிறார் ஹெச்.ராஜா

கரூர், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று (நவம்பர் 26) பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற அரசியல் பயிலரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் வி.வி. செந்தில்... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: "காமாலை கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.." - தாக்கும் அமைச்சர் ரகுபதி!

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாடு முதலமைச்சர் யாரையும் தரை குறைவாகப் பேசும் நபர் அல்ல என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிய... மேலும் பார்க்க

Stalin vs Ramadoss: அடுத்த கட்டத்துகுப் போகும் புது பஞ்சாயத்து! | Rain Alert | DMK | Imperfect Show

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க