செய்திகள் :

வயநாடு தேர்தல் வெற்றி: சான்றிதழைப் பெற்றார் பிரியங்கா காந்தி!

post image

வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று வழங்கினர்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்றதுடன், 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிக்க | தனுஷ் வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2024 மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்று, 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராகுலைவிட பிரியங்கா குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும் ராகுலின் வாக்கு வித்தியாசத்தை பிரியங்கா முறியடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தில்லியில் பிரியங்கா காந்தியிடம் கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று வழங்கினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அப்போது உடனிருந்தார்.

தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு ஆதரவு அளித்த வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்தார்.

மேலும் வயநாடு தொகுதி பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை: எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தேஷ்முக் வலியுறுத்தல்!

மகாராஷ்டிரத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் 16 எம்எல்ஏக்களும் பாஜகவில் சேர வேண்டும் என்று பாஜக தலைவர் ஆஷிஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி மீனவர்கள் விவகாரம்: ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு!

லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சுவர் எழுப்ப முயன்றவர்கள் மீது மண் சரிந்ததால் இருவர் பலி!

அருணாசலப் பிரதேசத்தில்சுவர் எழுப்ப முயன்றகட்டுமானத் தொழிலாளர்கள் மீது மண் சரிந்ததால் இருவர் பலியாகினர்.அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இட்டாநகரில் டோனி காலனியில் சுவர் எழுப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று(நவ. 26) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எ... மேலும் பார்க்க

அதானியைப் பாதுகாக்கிறதா மத்தியஅரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவரை அரசு பாதுகாப்பதாகக் குற்றம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி... மேலும் பார்க்க

அதானி, சாகர் அதானி மீது குற்றம் சாட்டப்படவில்லை: அதானி க்ரீன்

புது தில்லி: சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது உறவி... மேலும் பார்க்க