செய்திகள் :

தூத்துக்குடி மீனவர்கள் விவகாரம்: ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு!

post image

லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கனிமொழி, இதுகுறித்த கடிதத்தையும் அளித்தார்.

இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

'தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும்,

குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல்போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்' என்று பதிவிட்டுள்ளார்.

அதானியை கைது செய்ய வேண்டும்! - காங்கிரஸின் 4 கோரிக்கைகள்

அதானி விவகாரத்தில் மத்திய பாஜக அரசிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக ரூ. 2,100 கோடி கொடுத்த... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக போராடியதால் 4 ஆண்டுகள் தடை: பஜ்ரங் புனியா

அதிகப்படியான ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவு பிறப்பித்துள்ளது.2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண... மேலும் பார்க்க

ரூ. 3,383 கோடி சொத்துடன் முதலிடம் பிடித்த பாஜக எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.மகாராஷ்டிரத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சரா... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: 85% வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு! பாஜகவில் ஒருவர்கூட இல்லை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 85 சதவிகிதத்தினர் டெபாசிட் இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களே அதிகம்!மகாராஷ்டிர தேர்தல் மு... மேலும் பார்க்க

புது மின்சார ஸ்கூட்டரை பழுதுபார்க்க ரூ.90,000: உரிமையாளர் செய்தது என்ன?

புதிதாக வாங்கிய மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, ரூ.90,000 பில் வந்ததால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர், வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்.ஆனால், இந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ப... மேலும் பார்க்க

முதல்வர் பதவியை விரும்பவில்லை: ஏக்நாத் ஷிண்டே

முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், முன... மேலும் பார்க்க