காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை: எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தேஷ்முக் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று(நவ. 26) தொடங்கியது.
கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது.
தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
மாநிலங்களவை நாளை(நவ. 28) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவையின் மரபுகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
ஒத்திவைப்புக்குப் பிறகு மக்களவை நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய நிலையில், மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.