அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்ட...
அதானி, சாகர் அதானி மீது குற்றம் சாட்டப்படவில்லை: அதானி க்ரீன்
புது தில்லி: சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினா் சாகர் அதானி ஆகியோர் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என அதானி க்ரீன் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி, துறைமுகங்கள்-எரிசக்தி கூட்டுத்தாபனத்தின் நிறுவனர் தலைவர் சாகர் அதானி மற்றும் மற்றொரு முக்கிய நிர்வாகியான வினீத் ஜெயின் உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில நாள்களுக்கு முன்னா் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினா் சாகர் அதானி மற்றும் மற்றொரு முக்கிய நிர்வாகியான வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாக கூறப்படும் செய்திகள் "தவறானவை" என அதானி க்ரீன் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
"கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகை அல்லது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் சிவில் புகார்களில் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாக குற்றம் சாட்டப்படவில்லை.
இதையும் படிக்க |லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
பத்திர மோசடி சதி, கம்பி மோசடி சதி மற்றும் பத்திர மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை மற்றும் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் சிவில் புகார்களில் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என அதானி க்ரீன் மறுத்துள்ளது.
மேலும் "குற்றச்சாட்டுகள் தொடர்பான அபராதம் குறித்த எந்த தகவலும் குறிப்பிடவில்லை" என்று அதானி க்ரீன் கூறியுள்ளது.
கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவின் நீதித்துறையால் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.