``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை, கடலூர், நாகையில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் நவ. 29ஆம் தேதி கடற்கரையை ஒட்டி வடமேற்காக நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 9 துறைமுகங்களில், சென்னை, கடலூர், நாகையில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கையும், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதை அடுத்து 3-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.