அமெரிக்கா: NIH இயக்குநராக இந்திய வம்சாவளியை டிக் செய்த ட்ரம்ப் - யார் இந்த பட்ட...
மெரீனாவில் கரை ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை!
சென்னை மெரீனா கடற்கரையில் புயலின் கடும் சீற்றம் காரணமாக எச்சரிக்கை மிதவை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை டி5 காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள நடுகடலில் போடப்பட்டிருந்த எச்சரிக்கை மிதவை(Buoy) கடற்கரை மணல் அருகே ஒதுங்கியதும் கடலோர காவல்படையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க..: தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் புயல் எச்சரிக்கை கூண்டை மீட்டெடுத்து நடுக்கடலுக்குக் கொண்டுச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புயலின் எச்சரிக்கைகள் குறித்து அதிக காற்றழுத்தம் காரணமாக வீசப்படுவதால் புயலின் எச்சரிக்கை கூண்டு கடற்கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.