செய்திகள் :

உலகின் மிக வயதான நபர்... கின்னஸ் சாதனையாளர் ஜான் டின்னிஸ்வூட் மறைந்தார்!

post image

பிரிட்டனைச் சேர்ந்த உலகிலேயே மிகவும் வயதான நபரான ஜான் அல்ஃபிரட் டின்னிஸ்வூட் என்பவர், தனது 112-வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் உலகிலேயே வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைத்தார் ஜான் டின்னிஸ்வூட். இவர் ஆகஸ்ட் 26 1912 ஆம் ஆண்டு லிவர்பூலில் பிறந்தவர்.

ஆரம்பத்தில் இவர் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் ராணுவத்தில் நிதி சார்ந்த வேலைகளைச் செய்துள்ளார். பின்னர் ராயல் மெயில் எனும் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்னும் பிரிட்டனில் உள்ள தேவாலயம் ஒன்றில் பணியாற்றியுள்ளார் டின்னிஸ்வூட். முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ``நான் எப்போதும் இளைஞனைப்போல ஆக்டிவாக இருப்பேன்‌. நிறைய நடப்பேன்" என்று கூறியுள்ளார். கால்பந்து போட்டியின் தீவிர ரசிகரான இவர், லிவர்பூல் கால்பந்து குழுவின் தீவிர ரசிகராவார்.

ஜான் டின்னிஸ்வூட் தனது 100-வது பிறந்தநாளுக்கு முன்பு ஹோல்லிஸ் எனும் முதியோர் இல்லத்துக்கு குடிபெயர்ந்தார். தன் மரணம் வரை அவர் அங்குதான் வாழ்ந்தார். அங்கு சென்ற பின் தான் சற்று உற்சாகமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 2012ல் எலிசபெத் ராணி, ஜான் டின்னிஸ்வூட்டின் 100-வது பிறந்தநாளின்போது வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி நாட்கள் இசையாலும் அன்பாலும் நிறைந்திருந்ததாக அவரது உறவினர் கூறியுள்ளார்.

ஜான் டின்னிஸ்வூட்டிடம், நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்வதற்கு என்ன‌ காரணம் என கேட்டதற்கு, ``இது வெறும் அதிர்ஷ்டம் தான். நிறைய நாள்கள் வாழ்வதற்கும் குறைந்த நாள்கள் வாழ்வதற்கும் நாம் எதுவும் பண்ண‌ முடியாது" என்றார்.

`உலகத்தில் நீங்கள் கண்ட மாற்றம் என்ன?' என்று நிருபர் ஒருவர் ஜான் டின்னிஸ்வூட்டிடம் கேட்டதற்கு, ``ஏரோபிளேன் போன்ற நவீன தொழில்நுட்பத்தால் உலகம் சின்னதாக ஆகிவிட்டது. ஆனால் என்னை பொறுத்தவரை எந்த கண்டுபிடிப்பாலும் உலகம் முழுவதும் மாறிவிடவில்லை. உலகம் அதே போல தான் உள்ளது" என பதிலளித்தார்.

அறிவுரைகள் ஏதும் பெரிதும் வழங்காத ஜான் டின்னிஸ்வூட் இளைஞர்களுக்கு அடிக்கடி சொன்னது இதுதான், "நீங்கள் எதைச் செய்தாலும்... அதனை சிறப்பாகச் செய்துவிடுங்கள். நீங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தாலும் சரி, கற்றுக்கொடுப்பவராக இருந்தாலும் சரி."

பயணிக்கு CPR முதலுதவி செய்த TTE; ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோ; மருத்துவர்கள் எதிர்ப்பது ஏன்?

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் ரயில்வே வெளியிட்ட வீடியோ ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் டிடிஇ, பயணி ஒருவருக்கு சி.பி.ஆர் செய்து உயிரைக் காப்பாற்றியது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பதிவுக்கு மரு... மேலும் பார்க்க

Health: தண்ணீரை ஊற்றியா... பாத்திரத்திலா? - காய்கறிகள், பழங்கள் கழுவும் முறைகள்!

காய்கறிகளை முறையாகச் சுத்தம் செய்து உபயோகிப்பது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமையலின் கொதிநிலையில் கிருமிகள் போய்விடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும், நீரில் நன்கு சுத்தம் செய்து சமையலில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு பாதித்த எல்லோருக்கும் பார்வையில் பிரச்னைகள் வருமா?!

Doctor Vikatan: என் வயது 45. சர்க்கரை நோய்இருக்கிறது. எனக்கு சமீபகாலமாக பார்வையில் சில பிரச்னைகள்இருக்கின்றன. நீரிழிவு பாதித்துவிட்டாலே, கண் பார்வையில் பிரச்னை வரும், அது போகப் போக தீவிரமாகும் என்று ச... மேலும் பார்க்க

Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!

ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும்... மேலும் பார்க்க

America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன?

முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அமெரிக்காவின் மிக்சிகன் ( Mich... மேலும் பார்க்க

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க