``நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமே காரணம் அல்ல...'' - நடிகை கிருத்தி சனோன் சொல்வதென்ன?
“நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமே காரணம் அல்ல" என்று நடிகை கிருத்தி சனோன் பேசியிருக்கிறார்.
மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட கிருத்தி சனோன் நெப்போடிசம் குறித்து பேசியிருக்கிறார். “நான் சினிமாவில் நுழைந்ததிலிருந்தே இந்த பாலிவுட் திரையுலகம் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. திரையுலக பின்னணி இல்லாதவராக இருந்தால், உங்களுக்கான இடத்தை அடைய காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், 2,3 படங்களுக்குப் பிறகு தொடர்ந்து நீங்கள் கடினமான உழைப்பை செலுத்தினால், உங்களின் சாதனையை யாராலும் தடுக்க முடியாது. நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகை மட்டுமே நீங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் ஊடகங்களும் பார்வையாளர்களும்தான்.
ஒரு நட்சத்திர நடிகரின் பிள்ளைகள் சினிமாவில் நுழைவதை ஊடகங்கள் பெரிதுப்படுத்திக் காட்டுகின்றன. அவர்களை திரையில் காண பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவர்களை வைத்து படம் இயக்க முன் வருகிறார்கள்.
இது கிட்டத்தட்ட ஒரு வட்டம் போன்றது. இப்படிதான் இயங்கி கொண்டிருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை நீங்கள் திறமையானவராக இருந்தால் உங்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...