Bollywood: சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல்; பின்னணி என்ன?
நடிகர் சல்மான் கானை தொடர்ந்து தற்போது ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னாய் பற்றி நாம் சமீப நாட்களில் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்போம். பிஷ்னாய் சமூகத்தினர் புனித விலங்காகக் கருதும் `பளாக்பக்ஸ்' எனப்படும் ஒரு மான் வகையை 1998ஆம் ஆண்டு சல்மான் கான் வேட்டையாடியதில் தொடங்கியது இந்த மோதல்.
இதன் பிறகு சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை, லாரன்ஸ் பிஷ்னாய் குழுவினர் கொலை செய்தனர். அதனைத்தொடர்ந்து சல்மான் கானுக்கும் அந்த குழுவினரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த விவகாரங்களைத் தொடர்ந்து தனது பாதுகாப்பை சல்மான் கான் பலப்படுத்திக் கொண்டார். உடனடியாக துபாயிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள குண்டு துளைக்காத காரை இறக்குமதி செய்தார். கடந்த நவம்பர் 5ஆம் தேதி லாரன்ஸ் பிஷ்னாயின் சகோதரர் எனக் கூறி, சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விட்டிருக்கிறார் ஒருவர்.
"சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் எங்களுடைய கோவிலுக்குச் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், எங்களுக்கு 5 கோடி கொடுக்க வேண்டும். நாங்கள் சொல்வதை சல்மான் கான் செய்யத் தவறினால் அவரைக் கொலை செய்துவிடுவோம்." என லாரன்ஸ் பிஷ்னாயின் சகோதரர் என்ற பெயரில் மிரட்டல் வந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி லாரன்ஸ் பிஷ்னாயின் சகோதரர் எனக் கோரிய பிகராம் ஜலராம் பிஷ்னாயை கைது செய்திருக்கிறது காவல்துறை.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கும் இன்று (நவம்பர் ) கொலை மிரட்டல் வந்திருக்கிறது. "ஷாருக்கான் 50 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவரைக் கொலை செய்து விடுவோம்" என அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து மிரட்டல் வந்திருக்கிறது.
உடனடியாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கிறார். ராய்பூர் பகுதியிலிருக்கும் ஃபைசல் என்பவர்தான் இந்த கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பதை விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...