Bollywood: ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது!
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். முகமது ஃபயாஸ் கான் என்ற என்ற வழக்கறிஞர் ஷாருக் கானுக்கு மிரட்டல் விடுத்து 50 லட்சம் பணம் கேட்டுள்ளார். 59 வயதான இவர் சண்டிகர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபயாஸ் கான் மும்பை காவல்துறையினரிடம் சரணடைய மறுத்ததால் அவரைக் கைது செய்துள்ளனர். ஃபயாஸ் கான் அவரது சொந்த அடையாள அட்டையைக் கொண்டு வாங்கிய சிம் கார்டையே மிரட்டலுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
காவலர்களிடம் அவர் மிரட்டல் விடுத்த மொபைல் தொலைந்துவிட்டதாகவும், அது தொலைந்தது குறித்து முன்னரே காவல்துறையிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார் ஃபயாஸ்கான்.
ஃபயாஸ் கான் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 308 (4) (மரணம் அல்லது கடுமையாக தாக்குவதாக மிரட்டுதல்), 351 (3)(4) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாருக் கான் கடைசியாக பதான், ஜவான் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தது.
கொலை மிரட்டலைத் தொடர்ந்து, மும்பை காவலர்கள் ஷாருக் கானுக்கு Y+ பாதுகாப்பு வழங்கியிருக்கின்றனர். இதனால் அவரைச் சுற்றி எப்போதும் 6 ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் இருப்பர்.
வழக்கமாக 2 ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் ஷாருக் கான் உடன் இருப்பர்.
இதேப்போல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் மிரட்டல்கள் வருகின்றன. சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கேங்ஸ்டருக்கும் விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88