மக்களே உஷார்: 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 350 கி.மீட்டரும்,
சென்னையிலிருந்து 530 கி.மீ தொலைவிலும் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகியி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.