செய்திகள் :

பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

post image

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு என பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் அவரின் சீரிய வழிக்காட்டுதலால் தமிழ்நாடு பால்வளத்துறை மிகச்சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவிற்குத் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 2017 முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்த தமிழ்நாட்டின் பால் உற்பத்தி 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது.

தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு 2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க |குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

2022-23 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2023-24 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74 லட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 லட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் ரூ.38.63 லட்சம் ஆதரவு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் 5 இலட்சம் கறவை மாடுகளுக்கு 85 விழுக்காடு மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று பால் உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. முதல்வரின் வழிக்காட்டுதல்களால் பால்வளத்துறை எதிர்காலங்களில் இன்னும் புதிய சாதனைச் சிகரங்களை எட்டும் என ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மண் அரிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியான கீழத்தோட்டம் கடல் பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரு... மேலும் பார்க்க

நவ. 29, 30-ல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இது அடுத்த 6 மணி நேரத்... மேலும் பார்க்க

மசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்: கோவில் வளாகத்தில் பரபரப்பு

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது செல்போனில் செல்ப... மேலும் பார்க்க

பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 2 பேர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் ... மேலும் பார்க்க

குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: கஷ்டப்பட்டு பணி பெற்றவர்கள், கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும். குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு எனவும் காவலர்களுக்கு சட்டம்தான் முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மாநி... மேலும் பார்க்க

தஞ்சையில் தொடர் மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்!

தொடர் மழையால் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ. 26) காலைமுதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நெய்வாச... மேலும் பார்க்க