செய்திகள் :

புயல் சின்னம்: இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

post image

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 75 மி.மீ. கொட்டித் தீர்த்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளில் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(நவ. 27) தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கரைதீவு நகர் அருகே பள்ளிக் குழந்தைகள் 11 பேரை ஏற்றி வந்த டிராக்டr வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் 6 குழந்தைகளும், டிராக்டர் ஓட்டுநரும், உடன்சென்ற மற்றொருவரும் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் சில பகுதிகளில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் கடுமையான நடவடிக்கை எதிரொலி: போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையா... மேலும் பார்க்க

இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 6 பள்ளிக் குழந்தைகள் மாயம்!

இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமான 6 குழந்தைகள் தேடப்பட்டு வருகின்றனர்.வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான வானிலை நிலவுவதால், இது இலங்கைக்... மேலும் பார்க்க

லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரி... மேலும் பார்க்க

ஆஸி.: சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை மசோதா நிறைவேற்றம்!

ஆஸ்திரேலியாவில் சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமா் பரிந்துரை

லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அம... மேலும் பார்க்க