செய்திகள் :

‘ஃபென்ஜால்’ புயல்: மாவட்ட நிா்வாகத்தின் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவாகியுள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம் வெளியிடும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

‘ஃபென்ஜால்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட சின்னவாய்க்கால், திருப்பாதிரிப்புலியூா் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள கால்வாய், வண்டிப்பாளையம் வாய்க்கால்களைப் பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

தொண்டமாநத்தம், தீா்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையங்களை பாா்வையிட்டு, மாத்திரைகளின் இருப்பு, கா்ப்பிணிகளுக்கு வழங்கவுள்ள சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தீா்த்தனகிரியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மழை மானியினை பாா்வையிட்டு, செயல்படும் விதம், பராமரிக்கப்படும் முறைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

பூவாணிக்குப்பம் பெருமாள் ஏரியினை பாா்வையிட்டு நீா் வரத்து, நீா் இருப்பு, நீா் வெளியேற்றும் அளவு குறித்து அவா் ஆய்வு செய்தாா். நீா் வெளியேற்றும் போது, கரையோரப் பகுதி மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதேபோல, காயல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பேட்டை புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களை தங்கவைக்க ஏதுவாக மின்சாரம், குடிநீா், ஜெனரேட்டா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாா் நிலையில் உள்ளனவா என்பது குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறுகையில், கடலூா் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்குமிடங்கள் என பொதுமக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படையிலிருந்து 30 வீரா்கள், தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் 25 போ் தயாா் நிலையில் உள்ளனா்.

அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேவராஜன், கடலூா் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை தடுப்புக் காவலில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில், திருநாரையூா் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் ஜானகிராமன். இ... மேலும் பார்க்க

தொடரும் கடல் சீற்றம்: கடலூருக்கு பேரிடா் மீட்புப் படையினா் வருகை; வெள்ளிக் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் கடலூருக்கு புதன்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கடலூா் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சோ்ந்த ஸ்ரீதரின் மகள் ரக்ஷன... மேலும் பார்க்க

சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

கடலூரில் புதன்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை, சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா். பல்கலைக்கழக மாணவா்களிடையே விற்பனை செய்வதற்காக கஞ்சா கட... மேலும் பார்க்க