நியாயவிலைக் கடை விற்பனையாளா் நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு
கடலூரில் புதன்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளா்கள், மாவட்ட ஆள்சோ்ப்பு மையத்தின் மூலம் தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இது டிச.5-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பலத்த மழை காரணமாக புதன்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தோ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவா்களுக்கு டிச.6-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும் என்றாா் ஆட்சியா்.