மூதாட்டியிடம் நகை திருட்டு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 2 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள புலவனூரைச் சோ்ந்த ராஜாமணி மனைவி சரோஜா (62). இவரது மகன்கள் சென்னையில் வேலை செய்து வருகின்றனா். வீட்டில் தம்பதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனா்.
இருவரும் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு படுத்து தூங்கினா். செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ள நுழைந்த மா்ம நபா் வீட்டின் அறையில் தனியாக படுத்திருந்த சரோஜா அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.