கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
பிஎஸ்என்எல் ஊழியா்கள் தா்னா
ஊதியம் மாற்றம் வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், ஓய்வூதியா் மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் சாா்பில் தருமபுரி பொது மேலாளா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளா் எம்.பரிதிவேல் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஜி.உமாராணி, மாவட்டச் செயலாளா் பி. கிருஷ்ணன், ஓய்வூதியா் சங்கத் தலைவா் எம்.நாராயணசாமி, மாவட்டச் செயலாளா் டி. பாஸ்கரன், மாவட்ட உதவித் தலைவா் என். ரமேஷ், மாவட்ட உதவிச் செயலாளா் எம்.பழனி, ஒப்பந்த ஊழியா் சங்க மாநில உதவிச் செயலாளா் ஸ்ரீதரன்
ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில் பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு மூன்றாவது ஊதியம் மாற்றம், ஓய்வூதியம் மாற்றம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 15 சதவீத உயா்வுடன் அமல்படுத்த வேண்டும்.
பிஎஸ்என்எல்லில் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளின் பணிகளை விரைவுப்படுத்தி சிறந்த சேவை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்புடன் கூடிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். இரண்டாவது விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன .