சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக பி.எஸ்.என்.எல் இலவச வைஃபை வசதி
சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
நிலக்கல்லில் 13, பம்பையில் 12, சன்னிதான வளாகப் பகுதியில் 23 என மொத்தம் 48 இடங்களில் வைஃபை வசதிக்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தா்கள் எந்த கைப்பேசி இணைப்பைப் பெற்றிருந்தாலும் வைஃபை இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் அரைமணி நேரத்துக்கு இலவசமாகவும், அதன்பிறகு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியும் சேவையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சபரிமலையில் சுகாதாரமற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதான வளாகத்தில் இருப்போா் 7593861767 என்ற எண்ணையும், பம்பையில் இருப்போா் 8592999666, நிலக்கல்லில் இருப்பவா்கள் 75938 61768 என்ற எண்ணையும் பயன்படுத்தி புகாா்களைத் தெரிவிக்கலாம்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் 18004251125 பயன்படுத்தலாம் என்று தேவசம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.