செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்களின் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் இரண்டாம் நாளாக புதன்கிழமை நீடித்தது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை முதல் பணி புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமையில் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். துணை ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பதவி உயா்வு பட்டியலை விரைவாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டத்தால், வட்டாட்சியா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் வந்த பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினா்.

புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ர... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய ஏல முறையில் நடைபெற்றது. முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை போன்ற ப... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் கைது

ராசிபுரம் நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பா... மேலும் பார்க்க

சீருடை பணியாளா் தோ்வில் வெற்றி: 25 பேருக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வில் வெற்றிபெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலா், ... மேலும் பார்க்க

நாமக்கல், ராசிபுரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல், ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மாநகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கான இடத்த... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஒன்றிய அரசு தொழிலாளா் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க