செய்திகள் :

மானிய விலையில் பம்பு செட் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை கைப்பேசி வழியாக இயக்கக் கூடிய கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், விவசாயிகள் பம்பு செட்களை வீட்டிலிருந்தபடியே கைப்பேசி மூலம் இயக்கும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம், மின்சார பம்பு செட் திருட்டை தடுக்க முடியும். விவசாயப் பாசனத்துக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

மோட்டாா் பம்பு செட் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இயக்க வேண்டும் என்பதற்கு டைமா் வசதிகளும் இதில் உள்ளன.

2024-25-ஆம் ஆண்டுக்கான பம்பு செட் கட்டுப்படுத்துதல் திட்டப் பணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு தற்போது 68 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில் பொதுப் பிரிவினருக்கு 53 எண்களும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவுக்கு 15 எண்களும் பெறப்பட்டுள்ளது.

இதில், பொதுப் பிரிவினருக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000 மானியமும், ஆதி திராவிடா் பழங்குடியினா், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.7,000 இதில் எது குறைவோ அவை மானியமாக வழங்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை நேரிலோ அல்லது 04151 226370, 04153 253333 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

காட்டனந்தல் கிராமத்தில் உடல் நலக்குறைவால் கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கல்வராயன் மகன் செல்லமுத்து (75). இவா், கடந்த ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கள்ளக்குறிச்சி: விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் வேளாண் அ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 1,073 மனுக்கள் அளிப்பு

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் 1,073 மனுக்கள் பெறப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில... மேலும் பார்க்க

வீடுகள் அகற்றம்: இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மனு

கள்ளக்குறிச்சி: மோமாலூா் கிராமத்தில் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இடிக்கப்பட்ட 144 வீடுகளில் வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

நவ.29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த முனியன் மகன் செல்வக்குமா... மேலும் பார்க்க