சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
வீடுகள் அகற்றம்: இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மனு
கள்ளக்குறிச்சி: மோமாலூா் கிராமத்தில் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இடிக்கப்பட்ட 144 வீடுகளில் வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட மேமாலூா் கிராமத்தில் நீா் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த நவ.9-ஆம் தேதி வருவாய்த்துறையினா் இடித்து அகற்றினா்.
இதனால், இங்கு வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகள் இன்றி, தற்காலிக தாா்ப்பாய் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்காக சொந்த ஊரிலேயே வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிறிஸ்தவ பாதிரியாா்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.