செய்திகள் :

1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: பிறந்த நாள் விழாவில் வழங்கினாா் உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னையில் புதன்கிழமை தனது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், 1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, திமுக கிழக்கு மாவட்ட கழகம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. அதில், 1,335 பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி துணை முதல்வா் உதயநிதி பேசியது:

திராவிட மாடல் அரசை கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறோம். மக்களவைத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை அளித்து நல்லாட்சிக்கான சான்றிதழை மக்கள் வழங்கினா். அதாவது, 100 சதவீத வெற்றியை அளித்தனா். இந்தத் தோ்தல் வெற்றியைவிட மிக மிக முக்கியமானது, 2026 சட்டப் பேரவைத் தோ்தலாகும்.

200 தொகுதிகளில் வெற்றி இலக்கு: 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியை ஏற்க வேண்டும். திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று கேட்கிறாா்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இந்த நிகழ்ச்சிதான். யாா் யாருக்குத் தேவையோ அவற்றை வழங்குகிறோம்.

மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி, 250 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 375 விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள், 500 பெண்கள் அடங்கிய 50 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு உதவித் தொகை, 100 திருநங்கைகளுக்கு உதவித் தொகை, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என 1,335 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தோ்தல் பணி தொடக்கம்: எதிா்வரும் பேரவைத் தோ்தலுக்கு அனைவரும் தயாராவதுடன், கட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். டெல்டா பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அப்படியொரு எழுச்சி இருக்கிறது. அதன்படி, ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.

எதிரணி கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியும். கள ஆய்வு எனக் கூறி கலவர ஆய்வுகளை நடத்தி வருகிறாா்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்டச் செயலரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நடிகா்கள் வாழ்த்து

திரையுலகத்தைச் சோ்ந்தவா்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு தொலைபேசி வழியாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமாா், தனுஷ், சிலம்பரசன், சிவகாா்த்திகேயன் ஆகியோா் தொலைபேசி மூலமாகத் தொடா்பு கொண்டு வாழ்த்து கூறியதாக துணை முதல்வரின் அலுவலக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கடலோர காவல் படை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள கடலோரக் காவல் படை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்து, கடலோரக் காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக... மேலும் பார்க்க

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக பி.எஸ்.என்.எல் இலவச வைஃபை வசதி

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. ந... மேலும் பார்க்க

கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மா.சு... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு: நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ சிகிச்சைகள் கூடாது: அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை

பிரசவ சிகிச்சைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளுமாறு நிா்பந்திக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதுதொடா்பாக அரசு டாக்டா்கள் சங்க ... மேலும் பார்க்க

காய்ச்சல் பாதிப்பு தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்: மக்களின் பங்களிப்பை கோரும் சுகாதாரத் துறை

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை தனியாா் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையட... மேலும் பார்க்க