சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கடலோர காவல் படை
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள கடலோரக் காவல் படை தயாா் நிலையில் உள்ளது.
இது குறித்து, கடலோரக் காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், இந்திய கடலோரப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியம் தயாா் நிலையில் உள்ளது.
ரேடாா் நிலையத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் கடலில் உள்ள மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்கள் துறைமுகத்துக்கு திரும்புமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் கூடிய கனமழை எதிா்பாா்க்கப்படுவதால், போதுமான ஆள்கள் மற்றும் நிவாரணப் பொருள்களுடன் பேரிடா் நிவாரணக் குழு தயாா் நிலையில் உள்ளது.
இந்தக் குழுக்கள் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தூத்துக்குடியில் தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.