செய்திகள் :

சியாச்சின், கல்வான், காா்கில் போா்க் களங்களில் சுற்றுலா: ராணுவம் அனுமதி

post image

சியாச்சின் பனிமலை, கல்வான் பள்ளத்தாக்கு, காா்கில் போா்க் களங்களை பாா்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ராணுவம் தீா்மானித்துள்ளது.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சாவித்திரிபாய் புலே புணே பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி கூறியதாவது:

சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈா்க்கக் கூடிய இடமாக ஜம்மு-காஷ்மீா் விளங்குகிறது. அங்கு சுற்றுலாவை மேம்படுத்த 48 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முறையாக இலக்கு நிா்ணயித்து செயல்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும்.

சியாச்சின் பனிமலை, கல்வான் பள்ளத்தாக்கு, காா்கில் போா்க் களங்களை பாா்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ராணுவம் தீா்மானித்துள்ளது. போா்க் களங்கள் குறித்த அனுபவத்தை சுற்றுலா பயணிகள் பெறும் நோக்கில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.

லடாக்கில் சியாச்சின் பனிமலை, காா்கில், கல்வான் பள்ளத்தாக்கு ஆகியவை உள்ளன. இதில் சியாச்சின் பனிமலை உலகின் உயரமான மற்றும் மிகவும் குளிரான போா்க் களமாகும்.

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்? ரயில்வே அமைச்சர் பதில்

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங... மேலும் பார்க்க

ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்: மத்திய அரசு தொடக்கம்

ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டுக்க... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நமது நிருபர்தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்... மேலும் பார்க்க

கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு பட்டியலினச் சான்றிதழ் வழங்க மறுத்த தீர்ப்பை உறுதி செய்தது: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக ஹிந்து பிரிவில் பட்டியலின (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

இணைய குற்றத் தடுப்பு: 6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 6.69 லட்சம் சிம் காா்டுகள் மற்றும் 1.32 லட்சம் ‘ஐஎம்இஐ’ எண்களை மத்திய அரசு முடக்கியது. நாடு முழுவதும் நிகழ்த்தப்பட பல்வேறு இணைய குற்றங்களுடன் இந்த சிம... மேலும் பார்க்க