புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
பள்ளி அருகே சிகரெட் விற்ற கடைக்கு அபராதம்: ஆட்சியா் நடவடிக்கை
மதுரையில் மாவட்ட ஆட்சியா் மேற்கொண்ட ஆய்வின்போது, பள்ளிக்கூடம் அருகே உள்ள ஒரு கடையில் சிகரெட் விற்கப்பட்டது கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை தெற்கு வட்டத்துக்குள்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளிக்கூடம் அருகே உள்ள ஒரு கடையில் சிகரெட் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் கடையிலிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யவும், கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி, உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அந்தக் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஆய்வின் போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட நெகிலிப் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு ரூ. 2 ஆயிரம் அபராதமும், ஒரு கடையில் சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்டு ரூ. 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அப்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.