சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
சுக்கிர பகவான் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
சோழவந்தான் ஸ்ரீஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட சுக்கிர பகவான் கருங்கல் சிலை, மதுரை அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட சோழவந்தானில் உள்ள ஸ்ரீஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் அருகே 28 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் கொண்ட சுக்கிர பகவான் கருங்கல் சிலை அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
கோயில் செயல் அலுவலா் மேற்கொண்ட ஆய்வில், இந்தச் சிலை ஸ்ரீஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது. மேலும், நடத்தப்பட்ட விசாரணையின் போது, இந்தச் சிலைக்கு யாரும் உரிமை கோரவில்லை.
இதையடுத்து, இந்தச் சிலையை வட்டாட்சியா் ராமச்சந்திரன், மதுரை அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை ஒப்படைத்தாா். அருங்காட்சியகக் காப்பாட்சியா் மருதுபாண்டியா் சிலையைப் பெற்றுக் கொண்டாா்.