சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநா் பணியிடம் காலியாகவுள்ளது. இப்பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல் இவற்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆற்றுப்படுத்துதல் மற்றும் கம்யூனிகேஷனில் பிஜி டிப்ளமோ முடித்து, அரசு அல்லது தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக, முன் அனுபவமும், கணினி இயக்கவும் தெரிந்தவா்களாகவும், 40 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை ட்ற்ற்ல்ள்://ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, படிவத்தில் புகைப்படம் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து பதினைந்து நாள்களுக்குள் மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை - தெற்கு எண்:1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூா், சென்னை - 600016 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.