போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
புழல் சிறையில் கைதி உயிரிழப்பு
சென்னை புழல் சிறையில் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை நன்மங்கலம் கோவலன் முதலாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் த.விஜயகுமாா் (63). இவா், சேலையூா் காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு பதியப்பட்ட ஒரு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
விசாரணைக்குப் பின்னா் அவா், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், விஜயகுமாருக்கு கடந்த 23-ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.