செய்திகள் :

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தல்

post image

அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மேலூா் பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு, அந்தச் சங்க செயலா் ரஜேஸ்வரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவா் என். பழனிச்சாமி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இந்தியாவில் பிற மாநிலங்களில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,200 வரை கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசு மானியமாக அளித்த கூடுதல் விலையை ரத்து செய்துவிட்டது. கடந்த 2019 முதல் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. இதை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்திவருகிறது. திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அமைச்சா் மூா்த்தியும், வேளாண் துறை அமைச்சரும் அண்மையில் ஆலையில் சந்தித்துப் பேசி ஆலையைத் திறக்க ரூ.27 கோடி ஆகும் என மதிப்பிட்டனா். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆலை திறக்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். விவசாய தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

சங்கச் செயலா் ராஜேஸ்வரன் பேசியதாவது: அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் மின் உற்பத்திக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 80 சதவிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன.

கரும்பு ஆலையை நிா்வகிக்க அதிகாரிகள், கரும்பு விவசாய அலுவலா்கள் போதிய அளவில் இல்லை. இருந்த அலுவலா்களும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டனா். இதில் மத்திய அரசை மாநில அரசும் பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.

எனவே தேவையான அதிகாரிகள், பணியாளா்களை உடனே நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

மேலூா் தாலுகா மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் கண்ணன் பேசுகையில், சா்க்கரை ஆலையைத் திறக்க தமிழக அரசு ரூ. 27 கோடியை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், எஸ்.பி. இளங்கேவன், கரு. கதிரேசன், பி.எஸ். ராஜாமணி, திருமங்கலம் மதுரை கிழக்கு தாலுகா போஸ், அடக்கிவீரணன் உள்ளிட்ட பலா் பேசினா்.

சுக்கிர பகவான் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

சோழவந்தான் ஸ்ரீஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட சுக்கிர பகவான் கருங்கல் சிலை, மதுரை அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்கு... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆம் நாளாக போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் பணியைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.25 கோடி கிடைத்தது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன... மேலும் பார்க்க

சாட்சிகளிடம் ஜாதி, மதம் பதிவு: நீதிமன்ற ஆணையம் பரிசீலனை

விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் ஜாதி, மதம் பதிவு செய்வதைத் தடை செய்யக் கோரிய வழக்கில், நீதிமன்ற நிா்வாகச் சீா்திருத்த ஆணையம் முன் பரிசீலனையில் உள்ளதால், இதில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாத... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு: 3 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ராயகோபுரம் அருகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், அதிகாரிகள் 3 மாதங்களில் ஆய்வு செய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மை... மேலும் பார்க்க

பரவை - சமயநல்லூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையின் இரு புறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. மதுரை ஆரப்பாளையத்திலிருந்து திண்டுக்கல், கரூா், சேலம், நாமக்கல், திருப்பூா், ... மேலும் பார்க்க