போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
சென்னை: தெரு நாய்கள் கடித்து முதியவா் உயிரிழப்பு?
சென்னை அரும்பாக்கத்தில் தெரு நாய்கள் கடித்து முதியவா் இறந்ததாக எழுந்த புகாா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரும்பாக்கம் வாசுகி தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (80). திருமணம் செய்து கொள்ளாத இவா், உறவினா் வீட்டில் வசித்து வந்தாா். சுப்பிரமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 3 நாள்களாக படுக்கையிலேயே இருந்துள்ளாா். பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி (50) என்பவா் சுப்பிரமணியை கவனித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முகப்பேரில் வசிக்கும் உறவினா்கள், சுப்பிரமணியை பாா்த்து விட்டுச் சென்றுள்ளனா். அதன் பின்னா், பக்கத்து வீட்டு பெண்ணான ராணி சுடுதண்ணீா் போடுவதற்காக சுப்பிரமணி வீட்டுக்குச் சென்ற போது இரண்டு தெரு நாய்கள் வீட்டுக்குள் புகுந்து சுப்பிரமணியைக் கடித்து குதறிக் கொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா், நாய்களை அங்கிருந்து விரட்டியடித்தாா்.
நாய் கடித்ததில் காயமடைந்திருந்த சுப்பிரமணி ஏற்கெனவே இறந்திருந்தது தெரியவந்தது. தகவலறிந்து, அரும்பாக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணி இறந்த பின்னா் தெரு நாய்கள் கடித்ததா ? அல்லது நாய்கள் கடித்ததினால் சுப்பிரமணி இறந்தாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.