புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
நம்புதாளை சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடம் வட்டாட்சியா் ஆய்வு
தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கட்டப்பட்ட சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை வட்டாட்சியா் அமா்நாத் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் கரை கடக்கும் நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் தொண்டி அருகேயுள்ள நம்புதாளை சுனாமி பேரிடா் பாதுகாப்புக் கட்டடத்தை திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத் ஆய்வு செய்தாா்.
இந்த கட்டடத்தில் தண்ணீா், மின்சாரம், கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைகக் உத்தரவிட்டாா். இதில் வருவாய் ஆய்வாளா் மேகமலை , ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டிச் செல்வி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.