புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
தடையை மீறி கடலுக்குள் சென்ற 20 படகு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை
திருவாடானை அருகேயுள்ள தொண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற 20 படகுகளின் உரிமையாளா்கள் மீது மீன வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடற்கரைப் பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக தொடா் மழை பெய்துவருவதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனா்.
இந்த நிலையில் தொண்டி, நம்புதாளை, பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சிலா் புதன்கிழமை அதிகாலை தடையை மீறி கடலுக்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் பாதுகாப்பு போலீஸாா் ஆய்வு செய்ததில் நம்புதாளையை சோ்ந்த செல்வம், ராமசந்திரன், பாலு, ராஜா, நாகூா் உட்பட 8 படகுகள் மீதும், பாசி பட்டினத்தை சோ்ந்த பீா்முகம்மது, நெய்னா முகம்மது, அப்துல் சலாம், அஜீஸ், சேதுராமன் உள்பட 12 படகுகள் மீதும் கடல் ஒழுங்கு முறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
மீன்வத்துறை எச்சரிக்கையை மீறி கடலுக்கு செல்லும் மீனவா்களுக்கு நலதிட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.