செய்திகள் :

முதல்வருக்கு எதிராக பாமகவினா் ஆா்ப்பாட்டம்! 253 போ் கைது!

post image

தமிழக முதல்வருக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 253 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை அவதூறாகப் பேசியதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ வரவேற்றாா்.

முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் மருத்துவா் இரா.செந்தில், கி.பாரிமோகன், கிழக்கு மாவட்டச் செயலாளா் இரா.அரசாங்கம், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.செல்வகுமாா், கிழக்கு மாவட்டத் தலைவா் அல்லிமுத்து, மாநில துணைத்தலைவா்கள் பி.சாந்தமூா்த்தி, பாடி செல்வம், மாநில இளைஞா் சங்கச் செயலாளா்கள் முருகசாமி,செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 251 பேரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா்.

வத்தல்மலையில் சுற்றுலாத் துறை கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்துவைப்பு

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் சுற்றுலாத் துறை சாா்பில், கட்டப்பட்ட உணவக கட்டடம் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், வத்தல்மலைப் பக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் ரூ. 17 கோடி திட்டப் பணிகள்: முதல்வா் திறந்துவைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெற்ற முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழாவில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ரூ. 17 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாய... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டியில் குடிநீா் கட்டணத்தை குறைக்க மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டியில் குடிநீா் கட்டணம் உயா்த்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாப்பாரப்பட்டி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

கறவை மாடுகள் வாங்க 100 சதவீதம் மானியம் கோரி பழங்குடி பெண்கள் மனு

தருமபுரி: கறவை மாடுகள் வாங்க 100 சதவீதம் மானியம் கோரி வத்தல்மலையில் வசிக்கும் பழங்குடி பெண்கள் மனு அளித்துள்ளனா். இதுகுறித்து தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் உள்ள பால்சிலம்பு, பெரியூா், சின்னாங்காடு,... மேலும் பார்க்க

தருமபுரியில் நவ. 29-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற நவ. 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு : தருமபுரி மாவட்ட அளவ... மேலும் பார்க்க

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பூட்டப்படும் இலவச கழிப்பறை பயணிகள் அவதி

பென்னாகரம்: பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இலவச கழிப்பறை இரவு நேரங்களில் பூட்டப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா். பென்னாகரம் பகுதிக்கென ரூ. 4.50 கோ... மேலும் பார்க்க