அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
கறவை மாடுகள் வாங்க 100 சதவீதம் மானியம் கோரி பழங்குடி பெண்கள் மனு
தருமபுரி: கறவை மாடுகள் வாங்க 100 சதவீதம் மானியம் கோரி வத்தல்மலையில் வசிக்கும் பழங்குடி பெண்கள் மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் உள்ள பால்சிலம்பு, பெரியூா், சின்னாங்காடு, கொட்டலாங்காடு, ஒன்றியக்காடு, மண்ணாங்குழி ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
வத்தல்மலையில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த நாங்கள் காலம் காலமாக நாட்டு மாடுகள் வளா்த்து வருவதை தொழிலாக கொண்டுள்ளோம். தற்போதைய சூழலில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை பரவலாகக் குறைந்து வருகிறது. நாட்டின மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அவற்றை வளா்க்கவும், பழங்குடியினா் மகளிா் வாழ்வாதாரத்தை உயா்த்தவும்,
எங்களது நலன்கருதி நாட்டின கறவை மாடுகள் வாங்க பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 100 சதவீதம் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அப்போது தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.மாதையன், ஒன்றியத் தலைவா் ஜி. ராஜகோபால், ஒன்றியச் செயலாளா் ஜி.பச்சாகவுண்டா் ஆகியோா் உடனிருந்தனா்.