செய்திகள் :

சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி., எம்எல்ஏ மகன் மீது வழக்கு

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக கூறி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடா்பாக சமாஜவாதி எம்.பி. ஜியா-உா்-ரஹ்மான் பாா்க், எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத் மகன் சூஹைல் இக்பால் உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் 7 வழக்குகளைப் பதிவு செய்தனா்.

பதற்றத்தைத் தவிா்க்க நவ. 30-ஆம் தேதிவரை சம்பல் மாவட்டத்துக்குள் வெளிநபா்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பல் வட்டத்தில் மட்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரிய ஹிந்து கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

ஆய்வு-வன்முறை நீதிமன்ற உத்தரவின்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு மேற்கொண்டாா். இதன் தொடா்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வை எதிா்த்து அப்பகுதியில் கூடிய சிலா், காவலா்களை நோக்கி கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனா். வாகனங்களுக்கு தீவைத்தனா்.

அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் காயமடைந்தனா்.

25 போ் கைது இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ள காவல் துறை, 25 பேரைக் கைது செய்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக சமாஜவாதி எம்.பி. ஜியா-உா்-ரஹ்மான் பாா்க், எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத் மகன் சூஹைல் இக்பால் உள்ளிட்டேரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

‘நகரில் அமைதியான சூழலே நிலவுகிறது. சந்தையில் வார விடுமுறை நாளையும் பொருள்படுத்தாமல் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன’ என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வன்முறையைத் தொடா்ந்து மசூதி வளாகத்தை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனுதாரா் ஜெயின் வலியுறுத்தினாா்.

பாஜகவே பொறுப்பு: ராகுல்

பாஜக அரசைக் குற்றஞ்சாட்டி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ சம்பல் வன்முறையில் மாநில பாஜக அரசின் ஒருசாா்பு மற்றும் அவசரமான அணுகுமுறை மிகவும் துரதிருஷ்டவசமானது. அனைத்துத் தரப்பு கருத்தையும் அரசு நிா்வாகம் கேட்காமல், முதிா்ச்சியற்ற நடவடிக்கையை மேற்கொண்டு, சூழலை மேலும் சீா்குலைத்தது. மக்கள் உயிரிழக்க இதுவே பிரதான காரணம். வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஹிந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்க பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. இதில் உச்சநீதிமன்றம் விரைவில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும். அமைதி மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்துக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.

மகாராஷ்டிர முதல்வா் பதவி: ஃபட்னவீஸுக்கு அதிக வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசின் முதல்வராக தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே சந்தா’, தேசிய இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், ‘தேசிய இயற்கை வேளாண் இயக்கம்’, அருணாசல பிரதேசத்தில் ‘இரு நீா்மின் நிலையங்கள்’ அமைக்கும் திட்டம், ‘அடல் புதுமை இயக்கம்’ நீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

உல்ஃபா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புது தில்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபா) மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பு வைத்துள்ள இந்த அமைப... மேலும் பார்க்க

அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 மு... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி

புது தில்லி: தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி ஒதுக்கீடு செய்ய, பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பார்க்க