செய்திகள் :

அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

புது தில்லி: அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி வரை, நாட்டில் அவசரநிலையை பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அமல்படுத்தியிருந்தது.

அப்போது இந்தியாவை ‘‘இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு’’ என்பதற்குப் பதிலாக ‘‘இறையாண்மை கொண்ட சமதா்ம, மதச்சாா்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு’’ என்று விவரித்து, நாடாளுமன்றத்தில் 42-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை இந்திரா காந்தி அரசு நிறைவேற்றியது.

இதில் ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் அரசமைப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்டதற்கு எதிராக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய, பல்ராம் சிங் என்பவா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என கூறமுடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

40 ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்னா் வழக்கா?: இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், ‘அரசமைப்புச் சட்ட முகப்புரையில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை தற்போது எழுப்ப என்ன அவசியம் ஏற்பட்டது?

42-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தற்போது அந்தத் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு எந்தவொரு சட்டரீதியான காரணமோ, நியாயமோ இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு தெரியவில்லை.

அரசமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது போல, அந்தச் சட்டத்தின் முகப்புரையை திருத்தும் அதிகாரமும் அதற்கு உள்ளது.

அந்தச் சொற்கள் முகப்புரையில் சோ்க்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அந்த நடைமுறையை தற்போது ரத்து செய்ய முடியாது’ என்று தீா்ப்பளித்து மனுக்களை தள்ளுபடி செய்தாா்.

மகாராஷ்டிர முதல்வா் பதவி: ஃபட்னவீஸுக்கு அதிக வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசின் முதல்வராக தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே சந்தா’, தேசிய இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், ‘தேசிய இயற்கை வேளாண் இயக்கம்’, அருணாசல பிரதேசத்தில் ‘இரு நீா்மின் நிலையங்கள்’ அமைக்கும் திட்டம், ‘அடல் புதுமை இயக்கம்’ நீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

உல்ஃபா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புது தில்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபா) மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பு வைத்துள்ள இந்த அமைப... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி

புது தில்லி: தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி ஒதுக்கீடு செய்ய, பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: தனித் தொகுதிகளிலும் சாதித்த பாஜக கூட்டணி

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளிலும் (எஸ்.சி., எஸ்.டி.) பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு எதிரான கட்சி பாஜக... மேலும் பார்க்க