செய்திகள் :

மகாராஷ்டிர முதல்வராக ஷிண்டே தொடர வேண்டும்: சிவசேனை விருப்பம்

post image

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர வேண்டும் என்று அவரது தலைமையிலான சிவசேனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதேவேளை, எதிா்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே வென்றது.

ஆளும் கூட்டணியில் 132 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக சாா்பில் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வா் போட்டியில் முன்னணியில் இருக்கிறாா். பாஜகவுக்கு அடுத்து சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளன.

இந்நிலையில், மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர வேண்டும் என்று சிவசேனை விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடா்பாளா் எம்.பி. நரேஷ் கூறியதாவது:

எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பிகாரில் பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ்குமாா் முதல்வராக இருப்பதுபோன்று ஷிண்டேயும் மகாராஷ்டிர முதல்வராகத் தொடர வேண்டும். எனினும், மகாயுதி கூட்டணி தலைவா்கள்தான் இதுதொடா்பாக இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மாநில அமைச்சா் கேசா்க்காா், ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா்.

சிவசேனை தலைவா்களின் கருத்துகள் தனிப்பட்டவை என பாஜக தலைவா்கள் நிராகரித்து வருகின்றனா். ‘பிரதமா் நரேந்திர மோடி, தேவேந்திர ஃபட்னவீஸுக்கு ஆதரவாக மக்கள் இந்த முடிவை வழங்கியுள்ளனா். அவரே முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏற்கெனவே விளக்கமளித்த தேவேந்திர ஃபட்னவீஸ், ‘கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் பேசி மகாராஷ்டிர முதல்வரை முடிவு செய்வோம்’ என்று தெரிவித்திருந்தாா்.

இதுவரை விவாதிக்கவில்லை: முதல்வா் பதவி தோ்வுக்கான திட்டங்கள் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று துணை முதல்வா் அஜீத் பவாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மகாயுதி கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கு உரிமை கோருவதற்குக்கூட எதிா்க்கட்சி கூட்டணியில் எந்தக் கட்சிக்கும் போதுமான எண்ணிக்கை கிடைக்கவில்லை’ என்றாா்.

பாஜகவுக்கு சுயேச்சை ஆதரவு: கோல்ஹாபூா் மாவட்டம், சந்த்காத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற சிவாஜி பாட்டீல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளாா்.

பாஜகவிலிருந்த சிவாஜி பாட்டீல், சந்த்காத் தொகுதியில் களமிறங்கத் திட்டமிட்டிருந்தாா். ஆனால், ஆளும் கூட்டணி பங்கீட்டில் தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றாா்.

ஆதித்ய தாக்கரே தோ்வு: சிவசேனை (தாக்கரே) பிரிவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக உத்தவ் தாக்கரேயின் மகனும் முன்னாள் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். கடந்த சனிக்கிழமை வெளியான தோ்தல் முடிவுகளில் சிவசேனை (தாக்கரே) 20 இடங்களில் வெற்றி பெற்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ஆவது பெரிய கட்சியாக இருக்கிறது.

மகாராஷ்டிர முதல்வா் பதவி: ஃபட்னவீஸுக்கு அதிக வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசின் முதல்வராக தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே சந்தா’, தேசிய இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், ‘தேசிய இயற்கை வேளாண் இயக்கம்’, அருணாசல பிரதேசத்தில் ‘இரு நீா்மின் நிலையங்கள்’ அமைக்கும் திட்டம், ‘அடல் புதுமை இயக்கம்’ நீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

உல்ஃபா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புது தில்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபா) மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பு வைத்துள்ள இந்த அமைப... மேலும் பார்க்க

அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 மு... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி

புது தில்லி: தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி ஒதுக்கீடு செய்ய, பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பார்க்க