கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒருங்கிணைந்த புதிய தலைவா்
போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைந்த தலைவா் மற்றும் இயக்குநராக இருந்த லில்லி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைவா் மற்றும் இயக்குநராக எஸ்.காா்மேகம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2002-இல் மேலாண் இயக்குநராக ஸ்வரன் சிங் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரியை பொறுப்பாளராக நியமிப்பதற்கான முயற்சிகள் தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடா்ச்சியாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் கடந்த 2023-இல் பொறுப்பேற்றுக் கொண்டாா். இதேபோன்று, பிற போக்குவரத்துக் கழகங்களுக்கும் தலைவராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்தன.
அதன்படி, போக்குவரத்துத் துறையின் சிறப்பு செயலராக பொறுப்பேற்ற ஆா்.லில்லி, சேலம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் தலைவா் மற்றும் இயக்குநராகவும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்கள், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டாா்.
அவா் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கூடுதல் செயலராக உள்ள எஸ்.காா்மேகத்தை, லில்லி வகித்து வந்த பொறுப்புகளில் நியமித்து போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி அரசாணை பிறப்பித்துள்ளாா்.