செய்திகள் :

Divorce: `விவாகரத்துக்கு முக்கியமான 6 காரணங்கள்!' - விளக்கும் நிபுணர்! | காமத்துக்கு மரியாதை - 222

post image

ம் நாட்டிலும் விவாகரத்து நார்மலைஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணம் என்றால், விவாகரத்தும் சரிதான். ஆனால், சின்னச்சின்ன காரணங்களுக்கெல்லாம் விவாகரத்து வரை செல்வது வேண்டாமே என்கிற டாக்டர் காமராஜ், அப்படிப்பட்டக் காரணங்களையும், அவற்றை ஹேண்டில் செய்வதற்கான சில டிப்ஸையும் இங்கே வழங்கியிருக்கிறார்.

couple

1. பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்க்காதீங்க!

சிலருக்கு தானொரு பர்ஃபெக்ட்டான நபர் என்கிற எண்ணம் இருக்கும். துணையின் சின்னச் சின்ன பலவீனங்களையும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். 'துணையை என்னைப்போலவே ஒரு பர்ஃபெக்ட்டான நபராக்குவதே என் லட்சியம். அப்படிச் செய்தால் மட்டுமே துணையின் வாழ்க்கை உருப்படும்' என்கிற அளவுக்குப் பிடிவாதமாக இருப்பார்கள். தானொரு பர்ஃபெக்ட், உன்னையும் பர்ஃபெக்ட் ஆக்குவேன் என்பதெல்லாம் அறிவின்மையின் உச்சம். பரஸ்பரம் சிறு சிறு பலவீனங்களை ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டுமென்கிற வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்துவிட்டால் என்றும் மகிழ்ச்சிதான்.

2. கெட்ட வார்த்தைப் பேசாதீங்க!

சிலர், எந்த விஷயம் பேசினாலும் அதை விவாதப்பொருளாக்கி விடுவார்கள். அதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் அவர்களால் பேசவே முடியாது. அந்தக் கொந்தளிப்பில் அசிங்கமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளும் வந்து விழும். இது மிகவும் ஆபத்தானது. உங்கள் இயல்பு இதுதான் என்றால், எந்தவொரு விஷயத்தையும் முடிந்தவரை விவாதப்பொருளாக்காதீர்கள். விவாதமாக்கினாலும், அதைச் சண்டை வரை நடத்திச் செல்லாதீர்கள்.

couple

விவாகரத்துக் கேட்டு வரும் தம்பதியரை ஓர் அறையில் தனியாக உட்கார வைத்து சோதிக்கும் உளவியல் முறையொன்று இருக்கிறது. அப்படி உட்கார்ந்திருக்கும்போது, சம்பந்தப்பட்ட தம்பதியர் பேசிக்கொள்ளும் முறையை வைத்தே, அவர்கள் விவாகரத்து செய்துகொள்வார்களா, மாட்டார்களா என்பதைக் கண்டறிந்து விடலாம். அதிக சத்தமில்லாமல், சண்டையில்லாமல் பேசிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் விவாகரத்து முடிவைக் கைவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

3. முடிஞ்சதை தோண்டி எடுக்காதீங்க!

நீ/நீங்க அன்னிக்கு அப்படித்தான் நடந்துக்கிட்டே/நடந்துக்கிட்டீங்க... உன்/உங்க குடும்பத்துக்கே இதுதான் பொழப்பு... கல்யாணத்தன்னிக்குக்கூட இப்படித்தானே உன்/உங்க குடும்பம் நடந்துக்கிச்சு' என்று பல வருடங்களுக்கு முன்னால் நடந்த பிரச்னைகளையெல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து சண்டை போடாதீர்கள். இந்த வகை சண்டைகள் ஆபத்தானவை. அற்பக் காரணங்களுக்காக தம்பதியர் பிரிந்து போவதும், உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கும் இந்த வகை சண்டைகள்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும்.

கணவன், மனைவி

4. குறை கண்டுபிடிக்காதீங்க...

எல்லா கணவன், மனைவியுமே, தங்கள் பார்ட்னரிடம், 'எல்லா ஃபங்ஷனுக்கும் லேட்டாதான் கிளம்புவா/கிளம்புவார்' என்பது மாதிரி சில குறைகளையாவது கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். அதை வெளியில் சொல்லி சண்டையிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், மனதுக்குள் வைத்தபடியே சண்டை பிடிப்பவர்கள் இன்னொரு ரகம். இந்தக் குறைசொல்லி இயல்பினால்தான் வீட்டின் நிம்மதி பறிபோகிறது என்று நினைப்பவர்களுக்கு, ஒரு சமாதான டெக்னிக். இருவரும் தொடர்ந்து 21 நாள்கள் வாழ்க்கைத்துணையின் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க மாட்டேன்; அதைச் சொல்லவும் மாட்டேன் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு, அதை நூறு சதவிகிதம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த உறுதியை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதற்காக இருவரும் கையில் ஒரு கயிறு கட்டிக்கொள்ளலாம். கேட்பதற்குச் சற்று சினிமாத்தனமாக தெரிந்தாலும் வெரி எஃபெக்டிவ் முறையிது.

5. கேலி செய்யாதீங்க!

கணவனும், மனைவியும் கேலியும் கிண்டலுமாக வாழ்கிறார்கள் என்பது நல்ல விஷயம்தான். அதே நேரம், ஒருவருடைய கேலியும், கிண்டலும் மற்றவரைக் காயப்படுத்துகிற அளவுக்கு இருந்தால், அது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாக, அறிவுசார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த விஷயங்களில் ஏதோவொரு தகவலைத் தவறாக சொல்லிவிட்டால், 'நீயொரு முட்டாள்', 'உனக்கு எதுவுமே தெரியாது' என்கிற தொனியில் கேலி செய்யவே கூடாது.

கணவன் மனைவி

6. பெட்டரான நபரை தேடாதீங்க!

இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருந்தா இவரைவிட/இவளைவிட பெட்டரான நபர் கிடைத்திருக்கலாம் என்றோ, இன்னும் பெட்டரான நபரை தேடலாம் என்றோ, மனதுக்குள் எண்ணம் புகுந்தால் கையிலிருக்கிற வாழ்க்கையே தொலைந்து போகலாம். பொதுவாக தேடல் நல்ல விஷயம். ஆனால், இந்தத் தேடல் வேண்டவே வேண்டாம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

திருமணமான புதிதில் தம்பதியரைப் பிரித்து வைக்காதீர்கள்...! | காமத்துக்கு மரியாதை - 224

செக்ஸ் தொடர்பாகவும் குழந்தை பிறப்பு தொடர்பாகவும் எத்தனையெத்தனை மூட நம்பிக்கைகள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம். அதை விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ''ரகுவுக்கும் ராஜேஸ்வரிக... மேலும் பார்க்க

சிறுநீரும் வாயுவும் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறுகிறதா? | காமத்துக்கு மரியாதை - 221

சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவரும். அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும். குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் மெ... மேலும் பார்க்க

Relationship: தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்!

Relationship'இட்இஸ்மை பர்சனல்' என்றுசொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையேவிரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது.சமூக ஊடகங்கள்இணையிடம் தோன்... மேலும் பார்க்க

மனைவிக்கு உங்களைப் பிடிக்கணுமா? இந்த 10 பாயிண்ட்ஸை ஃபாலோ பண்ணுங்க... | காமத்துக்கு மரியாதை - 220

காமத்துக்கு மரியாதை 1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.காமத்துக்கு மரி... மேலும் பார்க்க

50 வயதுக்கு மேல அதிகரிக்கும் டைவர்ஸ்; இன்டர்நேஷனல் ரிசர்ச் சொல்வதென்ன? | காமத்துக்கு மரியாதை - 219

க்ரே டைவர்ஸ் (Grey Divorce) தெரியுமா உங்களுக்கு..? ஐம்பது வயசுக்கு மேல, அதாவது தலையில க்ரே ஹேர் வந்ததுக்கு அப்புறம் செய்யப்படுற விவாகரத்துக்குத்தான் க்ரே டைவர்ஸுனு பேர். இதுதொடர்பா உலகளவுல நடந்த ஆராய்... மேலும் பார்க்க